உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ஷார்ட் செல்லிங் விதிகளில் மாற்றம் இல்லை: செபி

 ஷார்ட் செல்லிங் விதிகளில் மாற்றம் இல்லை: செபி

பங்குச் சந்தையில் 'ஷார்ட் செல்லிங்' தொடர்பான தற்போதைய விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என, செபி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. பங்குகள் கையில் இல்லாமலே விற்பனை செய்யும் ஷார்ட் செல்லிங் முறைக்கான விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாகவும்; அவை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், கடந்த 2007ல் அறிமுகப்படுத்தப்பட்ட அதே நடைமுறையே இப்போதும் தொடர்வதாக செபி கூறியுள்ளது. முன்னதாக, 'ஷார்ட் செல்லிங், செக்யூரிட்டீஸ் லெண்டிங்' முறைகளை மறுஆய்வு செய்ய ஒரு நிபுணர் குழு விரைவில் அமைக்கப்படும் என்று, செபி தலைவர் துஹின் காந்த பாண்டே ஏற்கனவே தெரிவித்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ