மேலும் செய்திகள்
எஸ்.என்.எஸ்.ராஜலட்சுமி கல்லுாரி பட்டமளிப்பு விழா
28-Oct-2025
ஐ. பி.ஓ., வெளியிட தடையாக செபியுடன் இருந்த வழக்குகளை தீர்க்க 1,300 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக, தேசிய பங்குச் சந்தை அறிவித்துள்ளது. இதனால், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட என்.எஸ்.இ., ஐ.பி.ஓ., விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'கோ-லொகேஷன்' மற்றும் 'டார்க் பைபர்' இணைப்பு தொடர்பான முறைகேடுகளில் பங்குதாரர்களுக்கு சமமான அணுகலை வழங்க தவறியதற்காக, கடந்த 2019ம் ஆண்டில், என்.எஸ்.இ.,க்கு, செபி 1,100 கோடி ரூபாய் அபராதம் விதித்திருந்தது. தற்போது, இந்த வழக்குகளை தீர்க்க, வட்டியுடன் சேர்த்து 1,387 கோடி ரூபாய்க்கு, இரண்டு செட்டில்மென்ட் விண்ணப்பங்களை செபியிடம் தாக்கல் செய்துள்ளதாக, என்.எஸ்.இ., தெரிவித்துள்ளது.
28-Oct-2025