உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / பைன் லேப்ஸ் பங்கு ரூ.210 -- 221 ஆக நிர்ணயம்

பைன் லேப்ஸ் பங்கு ரூ.210 -- 221 ஆக நிர்ணயம்

பு திய பங்கு வெளியீட்டில் களமிறங்கும் 'பைன் லேப்ஸ்' நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 210 -- 221 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிதி தொழில்நுட்ப நிறுவனமான 'பைன் லேப்ஸ்' புதிய பங்கு வெளியீடு வாயிலாக, 3,900 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் ஐ.பி.ஓ., நவ., 7ம் தேதி துவங்கி, 11ல் நிறைவடைகிறது. நவ., 14ல் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் பேமென்ட்ஸ் மற்றும் வணிகர்களுக்கான பல்வேறு தீர்வுகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. நடப்பாண்டின் மார்ச் மாத நிலவரப்படி, இந்நிறுவனத்தின் தளங்களை 9.88 லட்சத்திற்கும் அதிகமான வணிகர்கள் பயன்படுத்தி வருகின்றனர். திரட்டும் நிதி எதற்காக?  சர்வதேச அளவில் உள்ள துணை நிறுவனங்களில் முதலீடு  கிளவுட் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல்  கடனை திருப்பி செலுத்துதல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை