உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ‘ரத்னதீப் ரீடெய்ல்’ ஐ.பி.ஓ., வருகிறது

‘ரத்னதீப் ரீடெய்ல்’ ஐ.பி.ஓ., வருகிறது

ஹைதராபாதைச் சேர்ந்த ‘ரத்னதீப் ரீடெய்ல்’ நிறுவனம், சில்லரை வணிக ‘சூப்பர் மார்க்கெட்’ கடைகளை நடத்தி வருகிறது. இந்நிறுவனம் ஐ.பி.ஓ., வெளியிட்டு நிதி திரட்டுவதற்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது. இதில், 400 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய பங்குகளையும், உரிமையாளர்கள், முதலீட்டாளர்களின் 1.49 கோடி பங்குகளையும் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கிடைக்கும் நிதியில் 40 கோடி ரூபாயை பயன்படுத்தி, கடன்களை அடைக்கவும், 260 கோடி ரூபாயை பயன்படுத்தி, புதிய கடைகளை திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை