உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / அரசு பத்திரங்களில் முதலீடு வெளிநாட்டவர்களுக்கு தளர்வு

அரசு பத்திரங்களில் முதலீடு வெளிநாட்டவர்களுக்கு தளர்வு

அ ரசு பத்திரங்களில் மட்டும் முதலீடு செய்யும் அன்னிய முதலீட்டாளர்களுக்கு, பல்வேறு விதிகளில் இருந்து தளர்வு அளிக்கப்படுவதாக, செபி தெரிவித்துள்ளது. மேலும் தெரிவித்துள்ளதாவது: அரசு பத்திரங்களில் மட்டும் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள், இனி பதிவு செய்யும் போது, முதலீட்டாளர் வகை விபரங்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்துக்கு உரிய கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒருமுறை பதிவை புதுப்பிப்பது எளிமைப்படுத்தப்படும். வழக்கமாக அன்னிய முதலீட்டாளர்கள் போல் இல்லாமல், இந்த வகை முதலீட்டாளர்கள், எந்தவொரு மாற்றம் குறித்தும் செபியிடம் முன்னரே தெரிவிப்பது, மாற்றம் இல்லை என்ற உறுதிமொழிப்படிவம் தாக்கல் செய்வது ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அதே சமயம், நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் ஏற்படும் பெரிய மாற்றம் குறித்து தெரிவிப்பது அவசியம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
செப் 12, 2025 19:03

பணம் போடும் போது கேள்வியே கேக்காம வாங்கிப் போட்டுப்பாங்க. திரும்பி பணத்தை எடுக்கும் போது அந்த ஐ.டி யக் கொண்டா. உயிரோட இருக்கிறது நீதானான்னு சர்டிபிகேட் கொண்டா, பேங்க அக்கவுண்ட்டுடன் ஆதார், ஓட்டர் ஐடி, பாஸ்போர்ட், டிரவிங் லைசன்ஸ், கைரேகை, ஜாதகம் எல்லாம் அட்டாச் பண்ணியிருக்கியான்னு கேப்பாங்க. பணம் கைக்கு வந்து சேருவதற்குள் தாவு தீந்துரும்.


புதிய வீடியோ