சரிவில் இருந்து மீளும் ரூபாய் 4 நாட்களில் 150 காசு உயர்வு
அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை காரணமாக, கடந்த 4 நாட்களில் இந்திய ரூபாயின் மதிப்பு 150 காசு வரை உயர்ந்து, தற்போது 94.50 என்ற அளவில் வலுவாக உள்ளது. 'ஹார்முஸ் ஜலசந்தி' மீண்டும் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 79 டாலராக குறைந்துள்ளது. இது, இந்தியாவின் இறக்குமதி செலவை பெருமளவு குறைக்கும். இந்திய சந்தையில் இருந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கும் போக்கு தற்போது கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 1.18 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்திருந்தனர். அடுத்து வந்த ஏப்ரல், மே மாதங்களில் விற்பனை கணிசமாக குறைந்தது.