| ADDED : நவ 20, 2025 12:49 AM
1 மியூச்சுவல் பண்டுகளின் விதிமுறைகளை மேம்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்கான காலக்கெடுவை, வரும் 24ம் தேதி வரை நீட்டித்து செபி அறிவித்துள்ளது. இந்த பரிந்துரையில், மொத்த செலவு விகிதம், தரகு கட்டணங்கள் தொடர்பாக, புதிய வரையறைகள் மற்றும் மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 2 செபியில் பதிவு செய்யாமல், கடன் பத்திரங்கள் வர்த்தகத்தில் ஈடுபடும் ஆன்லைன் தளங்கள் வாயிலாக முதலீடு செய்வது குறித்து, முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய தளங்கள், கட்டுபாட்டு அமைப்புகளை அணுகாதவையாக உள்ளதோடு, முதலீட்டாளர் பாதுகாப்பு முறைகளை கொண்டிருக்கவில்லை என செபி தெரிவித்துள்ளது. 3 அன்னிய முதலீட்டாளர்கள் பதிவு செய்யும் செயல்முறையை முழுவதுமாக மின்னணு முறையில் மேற்கொள்ள செபி திட்டமிட்டுள்ளது. இதனால், அவர்கள் பதிவு செய்யும் காலம், மாதங்களாக இருந்ததில் இருந்து, சில நாட்களாக குறைக்க முடியும். இந்திய பங்குச் சந்தையை எளிதாக அணுகும் வகையில், இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளதாக, செபி தெரிவித் துள்ளது.