உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / மியூச்சுவல் பண்டு கட்டணங்களை மாற்றியது செபி

மியூச்சுவல் பண்டு கட்டணங்களை மாற்றியது செபி

மி யூச்சுவல் பண்டு திட்டங்களில் செலவு விகிதத்தை முறைப்படுத்தவும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் செபி புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. மும்பையில் நேற்று நடந்த செபியின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் முக்கிய பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் * மியூச்சுவல் பண்டுகளின் மொத்த செலவு விகிதத்தில் இருந்து வரி மற்றும் இதர கட்டணங்கள் தனித்தனி யாக காட்டப்பட வேண்டும். அதாவது, பங்கு பரிவர்த்தனை வரி, முத்திரை வரி மற்றும் ஜி.எஸ்.டி., போன்ற கட்டணங்களை, மொத்த செலவு விகிதத்தில் இருந்து பிரித்து காட்டுவதன் வாயிலாக, முதலீட்டாளர்கள் தாங்கள் செலுத்தும் அடிப்படை கட்டணம் எவ்வளவு என அறிய முடியும் * ஐ.பி.ஓ., வாயிலாக நிதி திரட்ட விரும்பும் நிறுவனங்கள் தாக்கல் செய்யும் விண்ணப்ப ஆவணங்களை எளிமையாக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது * பொதுமக்களுக்கு கடன் பத்திரங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள், குறிப்பிட்ட வகை முதலீட்டாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்க இனி அனுமதிக்கப்படும் * பட்டியலிடப்பட்ட நிறுவனம், தற்போது 1,000 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கினால், அது, அதிக கடன் வாங்கிய நிறுவனத்திற்கான கடுமையான விதிகளுக்குள் வந்துவிடும். இந்நிலையில், இதற்கான வரம்பு, 5,000 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது * செபி அமைப்பின் உயர் அதிகாரிகள் தங்களின் சொத்து விபரங்களை வெளிப்படுத்துவது மற்றும் நலன் சார்ந்த முரண்பாடுகள் குறித்த உயர்மட்ட குழுவின் பரிந்துரைகள் ஆய்வு செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ