உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / கடன் வாயிலாக பங்கு முதலீடு கட்டுப்படுத்த செபி திட்டம்

கடன் வாயிலாக பங்கு முதலீடு கட்டுப்படுத்த செபி திட்டம்

பங்குகளில் கடன் வாயிலாக வர்த்தகம் செய்யும் ‘மார்ஜின்’ வர்த்தக முறைக்கு, கட்டுப்பாடுகளை கொண்டுவருவதற்கு செபி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மார்ஜின் வர்த்தக முறையில், முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதற்கு, குறிப்பிட்ட தொகையை மட்டும் செலுத்தினால் போதும். மீதம் பெரும்பகுதி தொகையை தரகு நிறுவனங்கள் கடனாக வழங்கி, அதற்கு கிட்டத்தட்ட 9 – 18 சதவீத அளவில் வட்டியும் வசூலிக்கின்றன. இந்நிலையில், மார்ஜின் வர்த்தக முறையில் வாங்கப்பட்ட கடன்களின் மதிப்பு 1.53 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டை விட 29 சதவீதம் அதிகமாகும். தவிர, கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பகுதி கடன்கள், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளுக்காக வாங்கப்பட்டுள்ளன. பொதுவாக பங்கு சந்தை சரியும்போது, முன்பு மேற்கொள்ளப் பட்ட மார்ஜின் வர்த்தகங்களால் அழுத்தம் அதிகரிக்கும். நடப்பு 2026ம் ஆண்டிலேயே, தென் கொரியாவில் அதிகளவில் மேற்கொள்ளப்பட்ட மார்ஜின் வர்த்தகங்களால், அந்நாட்டு பங்கு சந்தை பெரும் சரிவை சந்தித்தது. எனவே, அங்கு மார்ஜின் வர்த்தகங்களுக்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதேபோல, இந்தியாவிலும் மார்ஜின் வர்த்தகங்களுக்கு கட்டுப்பாடுகளை கொண்டுவருவதற்கு செபி திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை