உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  உச்சத்தில் வெள்ளி இ.டி.எப்., பண்டுகள்

 உச்சத்தில் வெள்ளி இ.டி.எப்., பண்டுகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின், கிரீன்லாந்து விவகாரம் தொடர்பான புவிசார் அரசியல் பதற்றங்களால், சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. இதன்விளைவாக, இந்திய சந்தையில் வெள்ளி இ.டி.எப்.,களின் மதிப்புகள் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. கமாடிட்டி சந்தையில் புதிய உச்சமாக, வெள்ளி ஒரு கிலோ 3.25 லட்சம் ரூபாயை தாண்டி வர்த்தகமானது.

விலையேற்றத்துக்கு காரணம்

*கிரீன்லாந்தை இணைக்கும் முயற்சியில் ஐரோப்பிய நாடுகளுடன் அமெரிக்கா கொண்டுள்ள மோதல் * ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய இறக்குமதி வரிகள் * குறைந்த வட்டி விகிதம், சர்வதேச நிச்சயமற்ற சூழலால் முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளியை நோக்கி திரும்புவது

புதிதாக முதலீடு செய்யலாமா?

* தற்போது விலை உச்சத்தில் இருப்பதால், மொத்தமாக முதலீடு செய்வதை தவிர்க்கவும் * சிறிய அளவுகளில் முதலீடு செய்யலாம் * ஏற்கனவே முதலீடு செய்தவர்கள், பகுதியளவு லாபத்தை பதிவு செய்யலாம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ