உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  டாடா குழும பங்குகள் 3 சதவீதம் உயர்வு

 டாடா குழும பங்குகள் 3 சதவீதம் உயர்வு

டா டா சன்ஸ் குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரனின் பதவியை, 3வது முறையாக நீட்டிப்பதற்கான முடிவு ஒத்திவைக்கப்பட்ட போதிலும், அக்குழுமத்தில் உள்ள நிறுவனங்களின் பங்குகள் நேற்று 3 சதவீதம் வரை உயர்ந்தன. நோயல் டாடா எழுப்பிய சில நிர்வாக மற்றும் முதலீட்டு தொடர்பான கவலைகள் காரணமாக, இந்த விவகாரம் உடனடி முடிவுக்கு வராமல் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய வணிகங்களில் ஏற்பட்ட இழப்புகள், மூலதன ஒதுக்கீடு மற்றும் ஆளுமை நடைமுறைகள் குறித்து விரிவான ஆய்வு தேவை என கூறப்படுகிறது. இந்நிலையில், டாடா குழுமத்தில் உள்ள நிறுவன பங்குகள், சந்தை ஏற்றத்தின் காரணமாக உயர்ந்ததே தவிர, பதவி நியமனம் குறித்த செய்தியால் அல்ல என நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், தலைமை தீர்மானம் குறித்து தெளிவு வரும் வரை, சந்தையில் குறுகிய காலத்தில் சில அனுமானங்கள் நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை