மேலும் செய்திகள்
என்.எப்.ஓ.,
1 hour(s) ago
சந்தை விலை நிலவரம்
04-Sep-2026
தினம் ஒரு பங்கு
04-Sep-2026
நேற்று 83 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய நிப்டி 110 புள்ளிகள் வரை உயர்ந்தது. பின்னர் இறங்க ஆரம்பித்து நாளின் இறுதியில் 41 புள்ளிகள் குறைந்து முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18-ல் 15 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 3 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி ஸ்மால்கேப்50' குறியீடு அதிக பட்சமாக 1.24 சதவீத உயர்வுடனும், 'நிப்டி100' குறியீடு அதிக பட்சமாக 0.11 சதவீத சரிவுடனும் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 12 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 9 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி ரியால்ட்டி' குறியீடு அதிக பட்சமாக 2.58 சதவீத ஏற்றத்துடனும், நிப்டி ஐ.டி., குறியீடு அதிக பட்சமாக 0.85 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,628 நிறுவனங்களின் பங்குகளில் 2,207 ஏற்றத்துடனும்; 1,311 இறக்கத்துடனும்; 110 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி பலவீனமான டெக்னிக்கல் சூழலிலேயே நிறைவடைந்துள்ளது. முக்கிய குறுகிய மற்றும் நடுத்தர கால சராசரிகள் (இ.எம்.ஏ.,) அனைத்திற்கும் கீழே நிறைவடைந்துள்ள நிப்டியின் ஆர்.எஸ்.ஐ., 37.11 என்ற அளவிலும், எம்.ஏ.சி.டி.,--69.36 என்ற அளவிலும் இருப்பது பலவீனத்தை உறுதிசெய்வதாய் இருக்கிறது.
1 hour(s) ago
04-Sep-2026
04-Sep-2026