உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / டெக்னிக்கல் அனாலிசிஸ்: செய்திகள் சாதகமாக இருந்தால் மீண்டும் ஏற்றம் தொடரலாம்

டெக்னிக்கல் அனாலிசிஸ்: செய்திகள் சாதகமாக இருந்தால் மீண்டும் ஏற்றம் தொடரலாம்

நிப்டி

மிகச்சிறிய ஏற்றத்தில் துவங்கி, பின்னர் படிப்படியாக இறங்கி, நண்பகலுக்கு பின் சிறிய ஏற்றம் கண்டு, நாளின் இறுதியில் 96 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் 16 குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி நெக்ஸ்ட் 50' குறியீடு அதிகபட்சமாக 0.11% இறக்கத்துடனும்; குறைந்தபட்சமாக 'நிப்டி மிட்கேப் 50' குறியீடு 0.37% இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 17 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில் 4 ஏற்றத்துடனும்; 13 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இதில், 'நிப்டி மெட்டல்' குறியீடு அதிகபட்சமாக 1.03% ஏற்றத்துடனும்; நிப்டி ஹெல்த்கேர் குறியீடு அதிகபட்சமாக 0.83% இறக்கத்துடனும் நிறைவடைந்தன.வர்த்தகம் நடந்த 3,179 பங்குகளில் 1,233 ஏற்றத்துடனும்; 1,847 இறக்கத்துடனும்; 99 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. ஒருவழியாக எதிர்பார்த்துக் காத்திருந்த டெக்னிக்கல் கரெக் ஷன் வந்துவிட்டது. ஆனால் இன்னமும் புல்லிஷ்னெஸ் நிப்டியில் முழுமையாக குறையவில்லை. செய்திகள் சாதகமாக இருந்தால், மீண்டும் ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்புள்ளது.

நிப்டி பேங்க்

ஆரம்பத்தில் இருந்தே இறக்கத்தை சந்தித்த நிப்டி பேங்க், நாளின் இறுதியில் 378 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. ஏற்றத்திற்கான வாய்ப்பு குறையாமல் இருந்தாலும், கணிசமான ஒரு இறக்கம் வராமல், மேல்நோக்கிச் செல்ல வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது. செய்திகளைப் பொறுத்தே, அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.Gallery


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை