மேலும் செய்திகள்
தினம் ஒரு பங்கு
22 hour(s) ago
ஜொலிக்க மறந்த ஜூவல்லரி பங்குகள்
23 hour(s) ago
விலை சரிவு கண்ட அரசு பத்திரங்கள்
01-Sep-2026
மீண்டும் இனிக்கும் சர்க்கரை பங்குகள்
01-Sep-2026
நேற்று இறக்கத்துடனே வர்த்தகத்தை தொடங்கிய நிப்டி, நாளின் இறுதியில் 24 புள்ளிகள் குறைந்து முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18-ம் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி ஸ்மால்கேப்250' குறியீடு குறைந்தபட்சமாக 0.05 சதவீதமும், 'நிப்டி மிட்கேப்100' குறியீடு அதிகபட்சமாக 1.39 சதவீதமும் சரிந்து முடிவடைந்தது. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 5 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 16 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 0.98 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி மிட்ஸ்மால் பைனான்சியல் சர்வீசஸ்' குறியீடு அதிகபட்சமாக 1.98 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,649 நிறுவனங்களின் பங்குகளில் 1,344 ஏற்றத்துடனும்; 2,194 இறக்கத்துடனும்; 111 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. மறுபடியும் நிப்டி முக்கிய சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழே நிறைவடைந்துள்ளது. ஆர்.எஸ்.ஐ., 42.86 என்ற அளவிலும், எம்.ஏ.சி.டி., -34.04 என்ற அளவிலும் ஆர்.ஓ.சி., -1.27 என்ற அளவிலும் இருப்பது இறக்கம் வரவோ அல்லது பெரிய மாற்றம் இல்லாது வர்த்தகமாகவோ வாய்ப்பு உள்ளது என்பதையே காட்டுகிறது.
22 hour(s) ago
23 hour(s) ago
01-Sep-2026
01-Sep-2026