மேலும் செய்திகள்
ஹெச்டிஎப்சி, வங்கி பங்கு விலை 3 சதவிகிதம் உயர்வு
8 minutes ago
எண்கள் சொல்லும் செய்தி
15-Sep-2026
நீங்க என்ன நினைக்கிறீங்க?
15-Sep-2026
நேற்று ஆரம்பத்தில் முந்தைய நாள் நிறைவை விட 178 புள்ளிகள் அதிகரித்து தொடங்கிய நிப்டி பின்னர் வேகமான இறக்கத்தை சந்தித்தது. பின்னர் சீராக இறக்கத்தை கண்டு நாளின் இறுதியில் 279 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 17ம் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி100' குறியீடு குறைந்தபட்சமாக 1.44 சதவீத இறக்கத்துடனும், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 3.27 சதவீத சரிவுடனும் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 1 குறியீடு மட்டும் ஏற்றத்துடனும்; ஏனைய 20 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 2.19 சதவீத உயர்வுடனும், 'நிப்டி ரியால்ட்டி' குறியீடு அதிகபட்சமாக 4.04 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. என்.எஸ்.இ., யில் வர்த்தகம் நடந்த 3,687 நிறுவனங்களின் பங்குகளில் 754 ஏற்றத்துடனும்; 2,824 இறக்கத்துடனும்; 109 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. பல முக்கிய சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழே நிப்டி நிறைவடைந்துள்ளது. சமீபத்தில் நிப்டி கண்ட குறைந்த நிறைவு இதுவாகும். ஆரம்பத்திற்கும் இறுதிக்கும் இடையே 457 புள்ளிகள் வீழ்ச்சியை நிப்டி கண்டதால் பெரியதொரு பியரிஷ் கேண்டில் வந்துள்ளது. இதுதவிர, நாளின் குறைந்த நிலையும் நாளின் இறுதி நிலையும் ஒரே அளவாக இருந்தது நாள் முழுதுமே சந்தையில் விற்பனை தொடர்ந்து இருந்ததையே காட்டுகிறது. இவை அனைத்தும் நிப்டி பலவீனமாக இருப்பதையே குறிக்கின்றன.
8 minutes ago
15-Sep-2026
15-Sep-2026