டெக்னிக்கல் அனாலிசிஸ் : எச்சரிக்கையுடன் குறுகிய வரம்புக்குள் நகரக்கூடும்
ஏற்றத்தில் ஆரம்பித்து மதியம் ஒரு மணியளவில் ஏறிய புள்ளிகளை, கிட்டத்தட்ட அப்படியே இழந்து இரண்டு மணிக்கு மேல் ஏற்றம் கண்டு, நாளின் இறுதியில் 132 புள்ளிகள் உயர்வுடன் நிப்டி நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ம் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 1.56 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி100' குறியீடு குறைந்தபட்சமாக 0.62 சதவிகித ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 17 ஏற்றத்துடனும்; 2 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 'நிப்டி கன்ஸ்யுமர் டியுரபிள்ஸ்' குறியீடு, அதிகபட்சமாக 0.87 சதவிகித இறக்கத்துடனும்; 'நிப்டி மீடியா' குறியீடு அதிகபட்சமாக 2.39 சதவிகித ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.