டெக்னிக்கல் அனாலிசிஸ்: செய்திகளே நிப்டியின் நகர்வை தீர்மானிக்கும்
ஆரம்பத்திலேயே கணிசமான இறக்கத்துடன் ஆரம்பித்த நிப்டி, சிறிது சிறிதாக இறக்கத்தில் இருந்து ஓரளவுக்கு மீண்டு, நாளின் இறுதியில் 385 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி 100' குறியீடு குறைந்தபட்சமாக 1.74 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 2.65 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 18 குறியீடுகள் இறக்கத்துடனும்; 1 குறியீடு ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மிட்ஸ்மால் ஐடி & டெலிகாம்' குறியீடு குறைந்தபட்சமாக 0.97 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி மெட்டல்' குறியீடு அதிகபட்சமாக 3.99 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 'நிப்டி ஐ.டி.,' குறியீடு மட்டும் 0.11 சதவீத ஏற்றத்துடன் நிறைவடைந்தன.