உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டி டெக்னிக்கலாக பலவீனமடைந்து வருகிறது

டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டி டெக்னிக்கலாக பலவீனமடைந்து வருகிறது

நிப்டி ஆரம்பத்தில் இருந்தே இறக்கத்தில் தொடர்ந்த நிப்டி, மதியம் 2.30 மணிக்கு மேல் சற்று இறக்கத்தில் இருந்து மீண்டு, நாளின் இறுதியில் 46 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகள் அனைத்துமே இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி 100' குறியீடு குறைந்தபட்சமாக 0.33 சதவிகித இறக்கத்துடனும்; 'நிப்டி மிட்கேப்100' குறியீடு அதிகபட்சமாக 0.98 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தது. 19 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில், 5 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 14 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இதில் நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 0.76 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி பி.எஸ்.யு., பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 3.07 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தது. வர்த்தகம் நடந்த 3,213 பங்குகளில், 1,052 ஏற்றத்துடனும்; 2,074 இறக்கத்துடனும், 87 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. டெக்னிக்கலாக இறக்கம் வருவதற்கான அமைப்புகள் தோன்ற ஆரம்பித்துள்ளது. சாதகமான செய்திகள் இல்லாதபட்சத்தில், பெரிய மாறுதல் இல்லாமல் போகுதல் அல்லது இறக்கம் என்ற இரண்டில் ஒன்று நடக்க வாய்ப்புள்ளது. 25,980 புள்ளிகளு-க்கு கீழே சென்றால், 25,890 வரை சென்று திரும்புவதற்கான வாய்ப்பும் உள்ளது.

நிப்டி பேங்க் இறக்கத்தில் ஆரம்பித்து, தொடர்ந்து இறக்கத்தில் இருந்த நிப்டி பேங்க், மதியம் 2:00 மணிக்கு மேல் இறக்கத்திலிருந்து மீண்டு, நாளின் இறுதியில் 74 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. இறங்குவதற்கான அறிகுறிகள் முழுமையாக இன்னும் உருவாகவில்லை என்றாலும், பெரிய ஏற்றத்திற்கான வாய்ப்புகள் குறைவே. 59,000- புள்ளிகளுக்கு மேலேயே தொடர்ந்து இருந்து வந்தால் மட்டுமே இறக்கத்திற்கான வாய்ப்பு குறைவு எனலாம். திசைதெரியா நிலையில் ஒரு நாள் இருப்பதற்கு வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை