மேலும் செய்திகள்
பாசிட்டிவ் செய்திகள் வந்தால் வேகமாக மீளக்கூடும்
23-Sep-2025
ஆ ரம்பத்திலிருந்தே இறக்கத்தை சந்தித்த நிப்டி, மதியம் சிறியதொரு மீட்சியை சந்தித்த போதிலும், மீண்டும் இறங்கி, நாளின் இறுதியில் 112 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. ஐ.டி., துறை மற்றும் வாகன உற்பத்தித்துறை பங்குகளின் இறக்கத்தின் தாக்கத்தால் இறக்கத்துடன் நிறைவடைந்தது. நிப்டி ஆட்டோ குறியீட்டில் உள்ள பங்குகளில், 13 பங்குகள் இறக்கத்தை சந்தித்தன. நிப்டியின் எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9):18.35 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12, சி.எல்.,):1.15, செய்கின் மணி ப்ளோ (21):-0.16 என இருப்பதால், ஏற்றம் வருவதற்கு நிப்டி முதலில் 25,080 என்ற அளவிற்கு மேலே சென்று வர்த்தகம் ஆகவேண்டும். இந்த நிலையை கடக்க முடியாவிட்டால், இறக்கம் தொடர்வதற்கான வாய்ப்பு அதிகம். இதற்கு செய்திகள் சாதகமாக இருக்க வேண்டியது கட்டாயமான ஒன்று.
23-Sep-2025