மேலும் செய்திகள்
சந்தை விலை நிலவரம்
7 hour(s) ago
ஃபோர்ட் போலியோ
7 hour(s) ago
எஸ்ஐபி முதலீட்டு வளர்ச்சி
7 hour(s) ago
ஃபண்டு பயோடேட்டா
7 hour(s) ago
ஐ.பி.ஓ.,
7 hour(s) ago
அடுத்தகட்ட வளர்ச்சிக்கு திட்டமிடும் பேங்க் ஆப் பரோடா
7 hour(s) ago
நேற்று 22 புள்ளிகள் இறக்கத்துடன் ஆரம்பித்த நிப்டி உடனடியாக ஏற்றம் கண்டு பின்னர் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து நாளின் இறுதியில் 53 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 17ம் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மிட்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 0.96 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி100' குறியீடு குறைந்தபட்சமாக 0.39 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 18 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 3 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி பார்மா' குறியீடு அதிகபட்சமாக 1.66 சதவீத உயர்வுடனும், 'நிப்டி பிரைவேட் பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 0.42 சதவீத சரிவுடனும் முடிவடைந்தன. என்.எஸ்.இ.,-யில் வர்த்தகம் நடந்த 3,651 நிறுவனங்களின் பங்குகளில் 2,262 ஏற்றத்துடனும்; 1,279 இறக்கத்துடனும்; 110 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. முக்கிய சராசரிகளுக்கு (14, 21, 50, 100 மற்றும் 200 நாள் இ.எம்.ஏ.,க்கள்) கீழே நிறைவடைந்துள்ளதால் டெக்னிக்கலாக நிப்டி இன்னும் பலவீனமாகத்தான் இருக்கிறது. இச்சிமோகு இண்டிக்கேட்டரில் நிப்டி டென்கன் - சென் (23,560) மற்றும் கிஜின் சென் (23,794) அளவிற்கு கீழே நிறைவடைந்திருப்பது குறுகிய கால இச்சிமோகு செட் அப் பலவீனமாக இருப்பதையே காட்டுகிறது.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago