உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / டெக்னிக்கல் அனாலிசிஸ்: சிறிதளவு ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது

டெக்னிக்கல் அனாலிசிஸ்: சிறிதளவு ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது

நிப்டி

நே ற்றைய வர்த்தகத்தில், 24,991-ல் ஏற்றத்துடன் துவங்கிய நிப்டி, 25,035 என்ற உச்சத்தை தொட்டு, மதியத்துக்கு பிறகு இறங்கி (24915) கடைசியில், நாளின் இறுதியில் 104 புள்ளிகள் ஏற்றத்துடன் 24,973-ல் நிறைவடைந்தது. நிப்டியின் எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9):33.07 ஆகவும் ரேட் ஆப் சேஞ்ச் (12, CL):0.41 ஆகவும் இருப்பது, சிறிதளவு ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்புள்ளது என்பதையே காட்டுகிறது. 24,975 என்ற எல்லைக்கு மேலே சென்று, தொடர்ந்து வர்த்தகம் நடந்தால் மட்டுமே, ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது எனலாம். தற்போதைய டெக்னிக்கல் அமைப்பின் படி, நிப்டி 24,914, 24,854 மற்றும் 24,808 என்ற நிலைகளை ஆதரவு நிலைகளாகக் கொண்டும், 25,034, 25,095 மற்றும் 25,141 என்ற எல்லைகளை தடுப்பு நிலைகளாகக் கொண்டும் செயல்பட வாய்ப்புள்ளது.

நிப்டி பேங்க்

நே ற்று 54,554- புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பத்த நிப்டி பேங்க் குறியீடு, தொடர்ந்து ஏற்றத்தை சந்தித்து, 54,705 என்ற உச்சத்தை தொட்டும்; 54,400 என்ற குறைந்த அளவை சந்தித்தும், பின்னர் 54,536 என்ற அளவில், 319 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9): 38.79 ஆகவும்; ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14,CL): 45.24 ஆகவும்; ரேட் ஆப் சேஞ்ச் (12,CL): -1.11 ஆகவும் இருக்கிறது. இந்த நிலைமையில் ஏற்றம் உருவாக 54,547 என்ற அளவுக்கு மேலே சென்று தொடர்ந்து வர்த்தகம் நடைபெற்றால் மட்டும், சிறிதளவு ஏற்றத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. 54,389, 54,242, மற்றும் 54,125 போன்ற நிலைகளை ஆதரவு நிலைகளாகக் கொண்டும்; 54,694, 54,852 மற்றும் 54,969 என்ற நிலைகளை தடுப்பு நிலைகளாகக் கொண்டும் நிப்டி பேங்க் செயல்பட வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ