டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டியில் திசை தெரியாத நிலை வரக்கூடும்
நேற்று 8 புள்ளிகள் இறக்கத்துடன் தொடங்கிய நிப்டி நாள் முழுவதுமே இறக்கத்தில் வர்த்தகமானது. நாளின் இறுதியில் 112 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18-ல் 7 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 11 குறியீடுகள் இறக்கத்துடனும் முடிந்தன. இவற்றில், 'நிப்டி ஸ்மால்கேப் 100' குறியீடு அதிகபட்சமாக 0.22 சதவீத உயர்வுடனும், 'நிப்டி 100' குறியீடு அதிகபட்சமாக 0.40 சதவீத சரிவுடனும் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 11 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 10 குறியீடுகள் இறக்கத்துடனும் முடிவடைந்தன. இவற்றில், 'நிப்டி பார்மா' குறியீடு அதிகபட்சமாக 1.02 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி சிமென்ட்' குறியீடு அதிகபட்சமாக 1.57 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,478 நிறுவனங்களின் பங்குகளில் 1,487 ஏற்றத்துடனும் 1,865 இறக்கத்துடனும், 126 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. எச்சரிக்கையுடன் கூடிய சிறிய புல்லிஷ்னெஸ் இன்னும் நிப்டியில் தென்படுகிறது. இருப்பினும் 24,600-க்கு மேலே சென்று நிறைவடைந்தால் மட்டுமே இந்த புல்லிஷ்னெஸ் உறுதிப்படும் என்பது கண்கூடாக தெரிகிறது.