உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / நிதானத்தின் எல்லைகள் தளர்கின்றன

நிதானத்தின் எல்லைகள் தளர்கின்றன

ரூபாய், ஒரு அணையால் தடுத்து நிறுத்தப்பட்ட நதி போல கடந்த சில வாரங்களாக அமைதியாக இருந்தது. ஆனால், கடந்த வார இறுதியிலிருந்து அந்த அமைதி குலையத் தொடங்கியது. ரூபாய் மீண்டும் 88.50 என்ற நிலையை நோக்கி மெதுவாக நகர்ந்து, பின் மறுபடியும் லேசாகக் குறைந்தது. நேற்றும் அதே நிலை நீடித்து, மீண்டும் அந்த அளவிற்கு அருகில் சென்றது. டாலர் பலவீனம் கதவை திறக்கிறது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு எதிரான வரிவிதிப்பை அறிவித்ததை அடுத்து, டாலர் சறுக்கியது. இது, ரூபாயை போன்று வளர்ந்து வரும் நாடுகளின் நாணயங்களுக்கு சிறிது கால அவகாசத்தைக் கொடுத்தது. உள்நாட்டு ஆதரவால் உத்வேகம ் அதிகரிப்பு உள்நாட்டில், வட்டி மானியத் திட்டத்தை புதுப்பிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதில், சிறு, குறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்களுக்கு, 3% வட்டி மானியம் வழங்கப்படும். இது ஒரு சிறிய மாற்றம் போல தோன்றலாம். ஆனால், இது அமெரிக்க வரிகளுக்கு மத்தியில், அதிக கடன் செலவுகளையும், குறைந்து வரும் லாபத்தையும் எதிர்கொள்ளும் சிறு ஏற்றுமதியாளர்களுக்கு சரியான நேரத்தில் கிடைத்த ஒரு பெரிய நிவாரணம். இது வெறும் நிதி உதவி மட்டுமல்ல, அரசின் உறுதியான நோக்கத்தையும் காட்டுகிறது. மூலதன சுமையைக் குறைப்பதன் மூலம், ஏற்றுமதி போட்டித்திறனை அதிகரிக்க அரசு இலக்கு வைத்து உள்ளது. காலப்போக்கில், வலுவான ஏற்றுமதிகள் ரூபாய்க்கு ஒரு பாதுகாப்பு வலையை வழங்கி, உலகளாவிய நிச்சயமற்ற சூழ்நிலைகளிலும் அது நிலைத்து நிற்க உதவும். தொழில்நுட்ப ரீதியாகப் பார்க்கும்போது, 88.80 - 88.85 என்ற அளவில் தடை உள்ளது. இதைத் தாண்டிச் சென்றால், அது 89.00 - 89.20 வரம்பை நோக்கிச்செல்ல வழி திறக்கும். மறுபுறம், 88.20 - 88.40 என்ற அளவில் ஆதரவு உள்ளது. இதைத் தாண்டிச் சென்றால், ரூபாய் படிப்படியாக வலுப்பெறத் தொடங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி