‘நிப்டி பி.எஸ்.யூ., பேங்க்’ 19% வரை உயர்ந்தது
நேற்றைய வர்த்தகத்தில் பொதுத்துறை வங்கிகள் குறியீடான ‘நிப்டி பி.எஸ்.யூ., பேங்க்’ அதிகபட்சமாக 9,775 புள்ளிகளை எட்டி, தனது முந்தைய வரலாற்று உச்சமான 9,919 புள்ளிகளை நெருங்கியுள்ளது. மேலும், வர்த்தகத்தின் முடிவில் 2.29 சதவீத உயர்வுடன் 9,761 புள்ளிகளில் நிலைபெற்றது. நடப்பு நவம்பர் மாதத்தில் மட்டும் ‘நிப்டி 50’ குறியீடு கிட்டத்தட்ட10 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், நிப்டி பி.எஸ்.யூ., பேங்க் குறியீடு 19 சதவீதம் வரை உயர்ந்து ஒட்டுமொத்த சந்தையையும் விஞ்சியுள்ளது. நடப்பு நவம்பர் மாதத்தில் மட்டும் ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பேங்க் ஆப் இந்தியா’ ஆகிய பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் 27 சதவீதம் வரை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை ஈட்டி தந்துள்ளன. காரணங்கள்
அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய பங்கு சந்தையில் அதிக அளவில் முதலீடு செய்ய ஆரம்பித்திருப்பது பொதுத்துறை வங்கி பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்தது பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் கணிசமாக குறைந்திருப்பது கடன் வளர்ச்சி சீராக அதிகரித்து இரண்டாம் காலாண்டில் வலுவான லாபத்தை பதிவு செய்திருப்பது தனியார் வங்கிகளுடன் ஒப்பிடுகையில் பொதுத்துறை வங்கி பங்குகளின் மதிப்பீடு கவர்ச்சிகரமாக இருப்பது. ஏற்றத்தை சந்தித்த டாப் 5 பங்குகள் (19.11.2026 நிலவரப்படி) பேங்க் ஆப் பரோடா 285.90 (4.15 %) பஞ்சாப் நேஷனல் பேங்க் 154.85 (3.53 %) சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா 33.61 (3.64 %) பஞ்சாப் அண்டு சிந்து பேங்க் 33.61 (3.64 %) பேங்க் ஆப் இந்தியா 161.90 (2.47 %)