உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  நிப்டியில் பலவீனமே அதிகமாக தென்படுகிறது

 நிப்டியில் பலவீனமே அதிகமாக தென்படுகிறது

நேற்று 75 புள்ளிகள் இறக்கத்துடன் ஆரம்பித்த நிப்டி, தொடர்ந்து இறங்கி நாளின் இறுதியில் 360 புள்ளிகள் வீழ்ச்சியுடன் முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 17ம் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மிட்கேப்50' குறியீடு குறைந்த பட்சமாக 1.52 சதவீதமும், 'நிப்டிஸ்மால்கேப் 50' குறியீடு அதிக பட்சமாக 1.89 சதவீதமும் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளும் இறக்கத்துடன் முடிவடைந்தன. இவற்றில், நிப்டி ஐ.டி., குறியீடு குறைந்த பட்சமாக 0.26 சதவீதமும், 'நிப்டி பி.எஸ்.யு., பேங்க்' குறியீடு அதிக பட்சமாக 3.24 சதவீதமும் சரிவுடன் நிறைவடைந்தன. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,676 நிறுவனங்களின் பங்குகளில் 869 ஏற்றத்துடனும் 2,716 இறக்கத்துடனும், 91 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டியின் குறுகிய கால டெக்னிக்கல் அமைப்பு பலகீனமாகவே உள்ளது. அனைத்து முக்கிய சராசரிகளுக்கும் (இ.எம்.ஏ.,) கீழே நிப்டி நிறைவடைந்துள்ளது. ஆர்எஸ்ஐ 27.69 என்ற அளவிலும் ஸ்டொக்காஸ்ட்டிக் %கே 2.48 என்ற அளவிலும் இருப்பது மொமெண்டம் மிகவும் பலகீனமாக இருப்பதை காட்டுகிறது. Galleryஎம்.ஏ.சி.டி., -259.74 என்ற அளவில் இருக்கிறது. 22,762 உடனடி முக்கிய சப்போர்ட்டாக உள்ளது. இதற்கு கீழே சென்றால் பலவீனம் இன்னும் அதிகரிக்கவே செய்யும். 23,080,-23,125 முக்கிய ரெசிஸ்டன்ஸாக உள்ளது. 23,322 என்ற லெவலைத்தாண்டாத வரை குறுகிய கால டெக்னிக்கல் அமைப்பு மாறுவதற்கான வாய்ப்பு இல்லை. தற்போதைய சூழ்நிலையில் நிப்டி ஓவர்சோல்டு நிலையில் இருந்தாலும், பலவீனம் அதிகமாக இருப்பதை மறுப்பதற்கில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி