தகுதியான முதலீட்டு ஆலோசகர் யார்?
க ஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, ஒரு முதலீட்டு ஆலோசகரை நம்பி முதலீடு செய்யும் முன், அவர் செபியின் அங்கீகாரத்தை பெற்ற முதலீட்டு ஆலோசகரா என்பதை உறுதிப்படுத்துவது அவசியம். ஆலோசகர்கள்
செபி விதித்துள்ள விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பர் குறைந்தபட்ச கல்வித் தகுதி, சான்றிதழ் மற்றும் போதுமான மூலதன தேவைகளை பூர்த்தி செய்திருப்பர் திட்டங்களில் உள்ள ரிஸ்க்குகள், கிடைக்கும் வட்டி போன்றவற்றை வெளிப்படையாக கூறுவர் ஒவ்வொரு திட்டங்களில் உள்ள முரண்பாடுகளையும் முதலீட்டாளர்களுக்கு எடுத்து கூறுவர் எச்சரிக்கைகள்
ஒருவர் தன்னை செபி 'அங்கீகாரம் பெற்றவர்' என்று கூறினாலும், அதை சரிபார்ப்பது அவசியம் தங்கள் பதிவு எண் அல்லது சான்றிதழைப் பகிர மறுத்தால், எச்சரிக்கை அவசியம் நிர்ணயிக்கப்பட்ட அல்லது உறுதியான வருமானத்தை வழங்கும் என கூறினால் எச்சரிக்கை தேவை ஆவணங்கள் இல்லாமல் முன்பணம் அல்லது பெரிய கட்டணங்களை கொடுக்குமாறு வற்புறுத்தினால் உஷாராக வேண்டும் சமூக வலைதளங்கள் வழியாக மட்டுமே தொடர்புகொண்டால் கூடுதல் கவனம் அவசியம் சரியான நபரா என்பதை அறிய வழி ஆலோசகர் செபி-யில் பதிவு செய்துள்ளாரா என்பதை சரிபார்ப்பது மிகவும் எளிது. ஆன்லைன் செயல்முறை
செபியின் www.sebi.gov.inஎனும் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும் Intermediaries / Market Infrastructure Institutions எனும் பகுதிக்கு செல்லவும் Registered Intermediaries என்பதை கிளிக் செய்யவும் பட்டியலில், முதலீட்டு ஆலோசகர் (Investment Adviser) என்பதை தேர்ந்தெடுக்கவும் அடுத்து, ஆலோசகரின் பெயர், நிறுவனத்தின் பெயர் அல்லது பதிவு எண் ஆகியவற்றை பயன்படுத்தி தேடலாம் ஆலோசகர் பதிவு செய்திருந்தால், பதிவு நிலை, காலம், முகவரி, ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என்பதை காணலாம்.