டிசம்பர் மாதத்தில் ‘நிப்டி 50’ புதிய உச்சத்தை தொடுமா?
கடந்த நான்கு வாரங்களில் கிட்டத்தட்ட 15 சதவீதம் வரை வளர்ச்சியை பதிவு செய்த இந்திய பங்கு சந்தைகள், நவம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் லாப பதிவு காரணமாக சற்றே சரிவை சந்தித்தன. கச்சா எண்ணெய் விலை உயர்வு, வங்கி பங்குகளின் பலவீனம் மற்றும் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டத்திற்கு முன்பான எச்சரிக்கை உணர்வு ஆகியவை இதற்கு காரணமாக அமைந்தன. இந்த சூழலில், 2026ம் ஆண்டு முடிவதற்குள் நிப்டி மீண்டும் தனது வேகத்தை மீட்டெடுத்து புதிய உச்சத்தை தொடுமா என்பது முதலீட்டாளர்களின் முக்கிய கேள்வியாக உள்ளது. முக்கிய காரணிகள்
பொருளாதார வளர்ச்சி மற்றும் வட்டி விகித போக்கு குறித்து ரிசர்வ் வங்கி எடுக்கும் முடிவுகள் அன்னிய முதலீட்டாளர்களின் வருகை அதிகரித்திருப்பது மேற்கு ஆசிய பகுதிகளில் ஏற்படும் பதற்றங்களால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர தொடங்கியிருப்பது அமெரிக்க பொருளாதாரத்தின் வலிமை மற்றும் பணவீக்கம் காரணமாக அங்கு வட்டி விகிதம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்திருப்பது இந்தியாவின் இரண்டாம் காலாண்டு ஜி.டி.பி., வளர்ச்சி, தொழில்துறை உற்பத்தி மற்றும் பி.எம்.ஐ., தரவுகள் வெளியாக இருப்பது.
வாய்ப்புள்ள துறைகள்
நிப்டி குறியீட்டிற்கு 25,900 – 26,100 என்ற வரம்பு மிக முக்கிய தடையாக உள்ள நிலையில், அனைத்து துறைகளின் பங்களிப்புடன் இந்த நிலையை தாண்டி நிலைகொண்டால் மட்டுமே சந்தை புதிய உச்சத்தை நோக்கி பயணிக்க முடியும்; இல்லையெனில் குறிப்பிட்ட வரம்பிற்குள்ளேயே நகர வாய்ப்புள்ளது. இந்நிலையில், ஒட்டுமொத்த சந்தையை நம்பாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குகளில் கவனம் செலுத்துமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக, பாதுகாப்பு துறை பங்குகளில் வாய்ப்புகள் உள்ளதாகவும், உலோகம், ஐ.டி., மற்றும் எப்.எம்.சி.ஜி., துறைகளில் குறுகிய காலத்திற்கு எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தெரிவித்துள்ளனர்.