உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  குரோ செயலியில் பத்திரங்கள் வாங்கலாம்

 குரோ செயலியில் பத்திரங்கள் வாங்கலாம்

முதலீட்டு தளமான 'குரோ' வாயிலாக, முதலீட்டாளர்கள் இனி கடன் பத்திரங்களை வாங்கி விற்க முடியும். இந்நிறுவனம், இதற்கான உரிமத்தை செபியிடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குரோ தன் செயலி வாயிலாகவே கார்ப்பரேட் பத்திரங்களை பட்டியலிட, வினியோகிக்க மற்றும் பரிவர்த்தனை செய்ய இந்த உரிமம் உதவும் . எனவே, சிறு முதலீட்டாளர்கள், குரோ தளம் வழியாக கார்ப்பரேட் பத்திரங்களை எளிதாகவும் வெளிப்படையாகவும் வாங்கவும், விற்கவும் முடியும். என்.எஸ்.இ., தரவுகளின்படி, குரோ பங்கு தரகு நிறுவனங்களில், 26.62 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. அதன் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 1.20 கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை