உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / தேசிய பங்கு சந்தையில் 10 கோடி முதலீட்டாளர்கள்

தேசிய பங்கு சந்தையில் 10 கோடி முதலீட்டாளர்கள்

மும்பை: தேசிய பங்குச் சந்தையில், பதிவு செய்துள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை, 10 கோடியை எட்டியுள்ளது. கடந்த ஐந்து மாதங்களில் மட்டும், ஒரு கோடி முதலீட்டாளர்கள் இணைந்து உள்ளனர்.கடந்த 2021 மார்ச்சில், 4 கோடி முதலீட்டாளர் என்ற நிலையை தொட, 25 ஆண்டுகள் ஆனது. அடுத்து கூடுதலாக ஒரு கோடி முதலீட்டாளர்கள் இணைய, சராசரியாக ஆறு முதல் ஏழு மாதங்கள் என குறைந்தது.கடைசி ஒரு கோடி முதலீட்டாளர்கள் இணைவதற்கு வெறும் ஐந்து மாதங்கள் மட்டுமே ஆனது. இந்த காலக்கட்டத்தில், நாளொன்றுக்கு 50,000 முதல் 78,000 புதிய முதலீட்டாளர்கள் கணக்கு துவங்கி உள்ளனர். மேலும் ஐந்தில் ஒருவர் பெண் முதலீட்டாளர்.தற்போதைய நிலவரப்படி, அதிக முதலீட்டாளர்கள் எண்ணிக்கை கொண்ட மாநிலங்களில், மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. உ.பி., இரண்டாவது இடத்திலும், குஜராத் மூன்றாம் இடத்திலும் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anu Sekhar
ஆக 15, 2024 18:53

ராகுல் சொல்லுவதை நம்பாதீர்கள். அவன் வடிகட்டின அறிவில்லாதவன். நாட்டுக்கு துரோகம் நினைக்கும் சுயநலவாதி. இந்தியா மக்கள் புத்திசாலிகள் இவன் முகத்தில் நல்ல கரி பூசினார்கள். மோடிக்கு ஆதரவு கொடுங்கள். இந்தியா வளர்ச்சி ஆகும்.


Ravichandran Perumalsamy
ஆக 15, 2024 10:14

Share Market is vulnerable. Chances of loosing money.


மேலும் செய்திகள்



புதிய வீடியோ