உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பங்கு சந்தையை பதம் பார்த்த பட்ஜெட்

பங்கு சந்தையை பதம் பார்த்த பட்ஜெட்

நேற்று பட்ஜெட் உரையை நிதியமைச்சர் வாசிக்க துவங்கியதும், பங்கு சந்தைகள் சரிவை நோக்கி திரும்பின.நேற்றைய வர்த்தக நேரத்தின் போது, மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 1,266 புள்ளிகள் சரிந்து, 80,000 புள்ளிகளுக்கும் கீழே இறங்கியது. இதேபோல், தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் 'நிப்டி' 400 புள்ளிகள் சரிந்து, 24,047 புள்ளிகள் வரை சென்றது. வர்த்தக முடிவில், நிப்டி 30 புள்ளிகள் குறைந்து 24,479 புள்ளிகளிலும், சென்செக்ஸ் 73 புள்ளிகள் குறைந்து, 80,429 புள்ளிகளிலும் நிறைவடைந்தன.பட்ஜெட்டில் குறுகிய கால மூலதன ஆதாயத்திற்கான வரி, 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகவும்; நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கான வரி 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.குறுகிய கால மூலதன ஆதாயத்துக்கான வரி அதிகரிக்கப்படுவது எதிர்பார்க்கக்கூடியது தான். ஆனால், முற்றிலும் எதிர்பாராத வகையில், நீண்ட கால மூலதன ஆதாய வரியும் அதிகரிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகவும் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.மேலும் பியூச்சர் அண்டு ஆப்ஷன் வர்த்தக பிரிவில் பரிவர்த்தனை வரியும் 0.02 மற்றும் 0.1 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பங்குகளை திரும்ப பெறுவதிலும் வரி உயர்த்தப்பட்டுள்ளது.மூலதன ஆதாயத்திற்கான வரி விலக்கு, 1 லட்சம் ரூபாயில் இருந்து, 1.25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது தான், முதலீட்டாளார்களுக்கு சற்றே ஆறுதலளிப்பதாக இருந்தது. அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 2,975 கோடி ரூபாய் அளவுக்கு -------பங்குகளை விற்பனை செய்தனர்.அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, நேற்று 5 பைசா குறைந்து , 83.71 ரூபாயாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

rsudarsan lic
ஜூலை 24, 2024 08:47

ஆக இனி யாரும் இந்த குஜராத் சந்தைக்கு போக மாட்டாங்களாமா? எல்லோரும் தங்கம் வாங்கி விவசாயம் செஞ்சு உருப்படுவாங்களா மா ? நடந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை