வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வாழ்த்துக்கள்
மேலும் செய்திகள்
வர்த்தக துளிகள்
29-Sep-2025
பங்குச்சந்தை ஒரு பார்வை
28-Sep-2025
மாநில அரசுகள் பசுமை மின்சாரம் வாங்க வலியுறுத்தல்
22-Sep-2025
நாட்டின் சரக்கு ஏற்றுமதி 7% உயர்வு
16-Sep-2025
புதுடில்லி,:எஸ்.பி.ஐ.,யின் தலைவர் பதவிக்கு, அதன் மூத்த நிர்வாக இயக்குனர், சல்லா ஸ்ரீனிவாசுலு செட்டி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ.,யின் தலைவர் தினேஷ் காரா, வருகிற ஆகஸ்ட் 28ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, தலைவர் பதவிக்கு பொருத்தமான அடுத்த நபரை தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல், எப்.எஸ்.ஐ.பி., எனப்படும், நிதி சேவை நிறுவனங்களின் உயர் பொறுப்புக்கானவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்வுக் குழுவால் நேற்று நடத்தப்பட்டது.பொதுவாக, வங்கியின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவர், தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். வழக்கமாக அது மிகவும் மூத்த நிர்வாக இயக்குனராகவே இருக்கும். அந்த வகையில், வங்கியின் மூத்த நிர்வாக இயக்குனர் சல்லா ஸ்ரீனிவாசுலு செட்டியை எஸ்.பி.ஐ.,யின் தலைவர் பதவிக்கு, தேர்வுக் குழு பரிந்துரைத்துள்ளது. தேர்வுக்குழு பரிந்துரைக்கும் நபரை, பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் நியமனக்குழு இறுதி செய்யும்.வேளாண்மை அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்ற சல்லா ஸ்ரீனிவாசுலு செட்டி, கடந்த 1988ல், எஸ்.பி.ஐ., வங்கியில் புரொபெஷனரி ஆபீசராக சேர்ந்தார். வங்கியின் பல்வேறு பிரிவுகளின் கீழ், துணை நிர்வாக இயக்குனர், பொது மேலாளர், தலைமை பொது மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
வாழ்த்துக்கள்
29-Sep-2025
28-Sep-2025
22-Sep-2025
16-Sep-2025