உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ஆயுத தயாரிப்பு ஆலைகள் இலங்கைக்கு இந்தியா உதவி

ஆயுத தயாரிப்பு ஆலைகள் இலங்கைக்கு இந்தியா உதவி

புதுடில்லி:இலங்கையில், ஆயுத தயாரிப்பு ஆலைகள் அமைப்பது தொடர்பாக, இந்தியாவுடன் பேச்சு நடத்தி வருவதாக, அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் புதனன்று தெரிவித்தார்.கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில், இந்தியா - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான இரண்டாவது கருத்தரங்கம் இலங்கையில் நடந்தது. இக்கருத்தரங்கில், இந்தியா - இலங்கை இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதென முடிவு செய்யப்பட்டது.இதன் ஒருபகுதியாக, இலங்கையில் ஆயுத உற்பத்தி பிரிவு ஒன்றை இந்தியாவின் ஒத்துழைப்புடன் அமைப்பதற்காக பேச்சு நடத்தி வருவதாக, அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரேமித்த தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கொழும்புவில் உள்ள இந்திய துாதர் சந்தோஷ் ஜா கூறியதாவது: இந்திய பாதுகாப்புத்துறை இன்று, அதிநவீன அமைப்புகளுடன், மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன், உலகத்தரம் வாய்ந்த உபகரணங்களை தயாரித்து வருகிறது. அத்தகைய அதிநவீன உபகரணங்களை இலங்கை போன்ற நம் நட்பு நாடுகளுக்கு கிடைக்கச் செய்வதில் இந்தியா உதவ தயாராக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ