புதுச்சேரியில் லெனோவா ஏ.ஐ., சர்வர்
புதுடில்லி:உயர் தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து வருவதையடுத்து, அதற்கேற்ப பயனளிக்கும் வகையில், புதுச்சேரியில் ஏ.ஐ.,எனும் செயற்கை நுண்ணறிவு சர்வர்களை தயாரிக்க துவங்கியுள்ளதாக, 'லெனோவா இந்தியா' நிறுவனம் தெரிவித்துள்ளது. சீன நிறுவனமான லெனோவா, செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுக்கு தேவையான சர்வர்களை இந்தியாவில் உருவாக்க முன்வந்துள்ளது. இதன் வாயிலாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி சந்தைகளுக்கு தேவையான வன்பொருட்களை இந்தியாவில் தயாரிக்க உள்ளது. இதையடுத்து, புதுச் சேரியில் ஏ.ஐ., சர்வர் களை தயாரிக்க துவங்கியுள்ளதாக, லெனோவா தெரிவித்துள்ளது.