உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / இந்தியாவுக்கான ஜப்பான் துாதர் கவுதம் அதானியுடன் சந்திப்பு

இந்தியாவுக்கான ஜப்பான் துாதர் கவுதம் அதானியுடன் சந்திப்பு

புதுடில்லி:புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை குறித்து, இந்தியாவுக்கான ஜப்பானிய துாதர் ஹிரோஷி சுசூகி உடன், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி பேச்சு நடத்தியுள்ளார்.சமீபத்தில் குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் மற்றும் கவ்டாவில் உள்ள உலகின் மிகப்பெரிய கலப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காவுக்கு, இந்தியாவுக்கான ஜப்பான் துாதர் சென்றிருந்தார். இச்சந்திப்பு குறித்து அதானி தன், 'எக்ஸ்' சமூக ஊடகத்தில் தெரிவித்திருப்பதாவது: ஜப்பான் துாதர் ஹிரோஷி சுசூகியுடன் மிகவும் ஈடுபாட்டுடன் கலந்துரையாடினேன்.புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை குறித்து இருவரும் பேச்சு நடத்தினோம். இந்தியாவின் கலாசாரம் குறித்து ஜப்பான் துாதர் பாராட்டு தெரிவித்தார்.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ