உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

மூன்று நாட்களுக்கு பின் சரிவு

 கடந்த மூன்று நாட்களாக ஏற்றத்தில் சென்றுகொண்டிருந்த சந்தை, நேற்று சரிவைக் கண்டது நேற்றைய சரிவுக்கு, அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேறி வருவதும், எச்.டி.எப்.சி., வங்கி பங்குகள் அதிகளவில் விற்கப்பட்டதும் முக்கிய காரணங்களாக அமைந்தன  அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த செவ்வாயன்று மட்டும், கிட்டத்தட்ட 4,066 கோடி ரூபாய் முதலீட்டை வெளியே எடுத்துள்ளனர் அமெரிக்காவின் சில்லரை விலை பணவீக்கம் குறித்த எதிர்பார்ப்புகளும் முதலீட்டாளர்களை சந்தையை சற்று கவனமாகவே அணுகச் செய்துள்ளது அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்று வரும் நிலையிலும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுத்த பங்குகளில் அதிக முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர் சிறு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதில் உள்ள விதிமுறைகளை சற்று கடுமையாக்கும் செபியின் முடிவுகளையும் முதலீட்டாளர்கள் கவனித்து வருகின்றனர். இதுவும் அவர்களின் ஜாக்கிரதை உணர்வை அதிகரித்துள்ளது உலக கச்சா எண்ணெய் சந்தையில், நேற்று ஒரு பேரலின் விலை 0.21 சதவீதம் அதிகரித்து, 82.55 டாலராக இருந்தது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, ஒரு பைசா அளவுக்கு உயர்ந்து, 83.50 ரூபாயாக இருந்தது.

நிப்டி

முந்தைய முடிவு :22,217.85நேற்றைய முடிவு: 22,200.55மாற்றம்: 17.30 இறக்கம் சிவப்பு

சென்செக்ஸ்

முந்தைய முடிவு: 73,104.61நேற்றைய முடிவு: 72,987.03மாற்றம்: 117.58 இறக்கம் சிவப்பு

நிறுவனங்கள் நிலை

(மும்பை பங்கு சந்தை) ஏற்றம் கண்டவை :56% இறக்கம் கண்டவை : 40%மாற்றம் காணாதவை:4%

ஏற்றம் கண்ட பங்குகள்

 கோல் இந்தியா சிப்லா பி.பி.சி.எல்., பார்தி ஏர்டெல் பவர் கிரிட் கார்ப்பரேஷன்

இறக்கம் கண்ட பங்குகள்

 ஏசியன் பெயின்ட்ஸ்  டாடா மோட்டார்ஸ் பஜாஜ் ஆட்டோ ஐச்சர் மோட்டார்ஸ் எச்.டி.எப்.சி., பேங்க்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி