உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / டாடா பிளே - ஏர்டெல் டி.டி.எச்., இறுதிக்கட்டத்தில் இணைப்பு

டாடா பிளே - ஏர்டெல் டி.டி.எச்., இறுதிக்கட்டத்தில் இணைப்பு

புதுடில்லி:'டாடா பிளே' மற்றும் 'ஏர்டெல் டிஜிட்டல் டிவி' நிறுவனங்கள், நேரடியாக தாங்கள் வழங்கும் டி.டி.எச்., சேவையை இணைப்பதற்கான பேச்சை, இறுதி செய்து வருகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.டாடா மற்றும் பார்தி குழுமங்கள், தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் டி.டி.எச்., சேவைகளான டாடா பிளே மற்றும் ஏர்டெல் டிஜிட்டல் டி.வி.,யை இணைப்பதற்கான இறுதிக்கட்ட வேலைகளில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய நுகர்வோர்கள் டிஜிட்டல் தளங்களுக்கு மாறி வருவதால், இம்முடிவை இந்நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.இந்த இணைப்பின் வாயிலாக ஏற்படுத்தப்படும் ஒருங்கிணைந்த நிறுவனத்தில், ஏர்டெல் 52 முதல் 55 சதவீத பங்குகளையும்; டாடா பிளே 45 முதல் 48 சதவீத பங்குகளையும் வைத்திருக்கும். ஏர்டெல் வாயிலாக இந்த ஒருங்கிணைந்த நிறுவனம் நிர்வகிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. கடந்தாண்டு அக்டோபர் 8ம் தேதி, இந்த ஒருங்கிணைப்பு குறித்த அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. இரு தரப்பினரும் வரும் நாட்களில் விதிமுறை ஒப்பந்தங்களை அறிவிப்பார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டில் நடந்த டிஷ் டிவி - வீடியோகான் டி2எச் இணைப்பைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இரண்டாவது பெரிய பரிவர்த்தனையாக இந்த ஒப்பந்தம் இருக்கும் என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை