உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / இலக்குக்கு 5 ஆண்டுகள் முன்பே எட்டப்பட்டது; 20 சதவிகிதம் எத்தனால் கலப்பு

இலக்குக்கு 5 ஆண்டுகள் முன்பே எட்டப்பட்டது; 20 சதவிகிதம் எத்தனால் கலப்பு

புதுடில்லி: வருகிற 2030ம் ஆண்டுக்குள், பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பிற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 5 ஆண்டுகளுக்கு முன்னரே, அந்த இலக்கை இந்தியா எட்டியுள்ளதாக, பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சி நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி சார்பை குறைக்க உதவியது. இதனால் அன்னிய செலாவணியை சேமிக்க வழி வகுத்துள்ளது. கார்பன் வெளியேற்றத்தை குறைத்து, சுற்றுசூழல் மாசுபாட்டை குறைக்க உதவியுள்ளது.https://x.com/dinamalarweb/status/1948548286006395273கிராமப்புற விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து விவசாய பொருளாதாரத்தை வலுப்படுத்தியுள்ளது. சமீபத்தில், தற்போதைய சந்தைப்படுத்துதல் பருவத்தில், மொலாசஸில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை