மேலும் செய்திகள்
இரண்டாவது நாளாக தொடர்ந்த சரிவு
17-Oct-2024
• தொடர்ச்சியாக, மூன்று நாட்கள் சரிவை கண்ட இந்திய பங்குச் சந்தை குறியீடுகள், வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று உயர்ந்தன. இருப்பினும், வாரத்தின் மொத்த அடிப்படையில், மூன்றாவது வாரமாக சரிவுடன் சந்தைகள் நிறைவு பெற்றன.• வர்த்தக துவக்கத்தில் சந்தை குறியீடுகள் சரிவுடன் துவங்கின. இருப்பினும், பிற்பகல் வர்த்தகத்தின் போது, வங்கி, உலோகத் துறை மற்றும் ரியல் எஸ்டேட் சார்ந்த பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். இதனால், சந்தை ஏற்றத்துடன் முடிந்தது.• நிப்டி குறியீட்டில் வங்கி, ரியல் எஸ்டேட் தவிர, வாகனம் உள்ளிட்ட மற்ற துறை பங்குகள் வீழ்ச்சி கண்டன. சென்செக்ஸ் குறியீட்டில், 1,942 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 1,933 நிறுவன பங்குகள் குறைந்தும், 108 நிறுவனங்களின் பங்குகள் விலை மாற்றமின்றியும் காணப்பட்டன. • தொடர்ச்சியாக அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேறினாலும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் கைகொடுத்ததால், சந்தை சற்றே மீண்டுள்ளது. இருப்பினும், உலகளாவிய சந்தை குறியீடுகள், இரண்டாம் காலாண்டு முடிவுகள் ஆகியவை, வரும் வாரத்தின் சந்தை போக்கை தீர்மானிக்கும் என, பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.அன்னிய முதலீடுஅன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 5,486 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்திருந்தனர்.கச்சா எண்ணெய்உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.07 சதவீதம் குறைந்து, 74.40 அமெரிக்க டாலராக இருந்தது.ரூபாய் மதிப்புஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 பைசா குறைந்து, 84.07 ரூபாயாக இருந்தது.டாப் 5 நிப்டி 50 பங்குகள்அதிக ஏற்றம் கண்டவை ஆக்ஸிஸ் வங்கி விப்ரோ ஐச்சர் மோட்டார்ஸ் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஸ்ரீராம் பைனான்ஸ்அதிக இறக்கம் கண்டவை இன்போசிஸ் பிரிட்டானியா ஏசியன் பெயின்ட் நெஸ்லே இந்தியா டெக் மஹிந்திரா
17-Oct-2024