திராட்சையை விஞ்சிய வாழைப்பழ ஏற்றுமதி
புதுடில்லி:கடந்த நிதியாண்டில், இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட பழமாக, வாழைப்பழம் மாறி உள்ளது. கடந்த 2018ம் நிதியாண்டு ஏற்றுமதியுடன் ஒப்பிடுகையில், ஏழு மடங்கு அதிகரித்துள்ளது. இதுவரை இந்தியாவிலிருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த திராட்சையை கடந்த நிதியாண்டில் வாழைப்பழம் பின்னுக்குத் தள்ளி முன்னேறி உள்ளது.ஏற்றுமதி அதிகரிப்புக்கு விலைக்குறைவும், மத்திய கிழக்கு நாடுகளின் தேவை அதிகரிப்புமே காரணம் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நடப்பு நிதியாண்டிலும் ஏற்றுமதி கடந்த நிதியாண்டைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் திராட்சை ஏற்றுமதி, 16 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், வாழைப்பழ ஏற்றுமதி ஏழு மடங்கு அதிகரித்துள்ளது.
தேயிலை ஏற்றுமதி
இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் காரணமாக, ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதியை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இதன் காரணமாக, 100 முதல் 150 கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலை ஏற்றுமதி பாதிப்படைந்துள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான மோதலால், ஏற்கனவே, மேற்கொள்ளப்பட்டுள்ள தேயிலை இறக்குமதிக்கான ஒப்பந்தத்தின் கீழ், ஈரானிய வாடிக்கையாளர்களுக்கு தேயிலை சென்றடைவது கடினமாகியுள்ளதாக தொழிற்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.
வாழைப்பழம் ஏற்றுமதி
2023-24: ரூ.2474 கோடி2024-25: ரூ.3209 கோடி29.70% உயர்வு
கடந்த நிதியாண்டில் வாழைப்பழ ஏற்றுமதியில் 47 சதவீதம் ஈராக் நாட்டுக்கு ஏற்றுமதியானது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 108 சதவீதம் அதிகமாகும்.
முக்கிய இறக்குமதி நாடுகள்ஈரான் உஸ்பெகிஸ்தான் யு.ஏ.இ.,ஓமன் சவுதி குவைத் பஹ்ரைன்கத்தார்