மேலும் செய்திகள்
4 நாட்களில் ரூ.9.65 லட்சம் கோடி இழப்பு
20-Dec-2024
• வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகள் கணிசமான சரிவு கண்டன. நிப்டி, சென்செக்ஸ் 1 சதவீத வீழ்ச்சி கண்டன• நேற்று வர்த்தகத்தை சந்தை குறியீடுகள் சரிவுடன் துவங்கின. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், நிறுவனங்களின் மூன்றாவது காலாண்டு முடிவுகள் வெளிவர துவங்கிய நிலையில், முதலீட்டாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் ஐ.டி., நிதி மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைச் சார்ந்த நிறுவனங்களின் பங்குகளை விற்றதால், சந்தை குறியீடுகள் மேலும் இறக்கம் கண்டன• நிப்டி குறியீட்டில், நுகர்பொருட்கள் தவிர்த்து அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடுகளும் இறக்கம் கண்டன. அதிகபட்சமாக, ரியல் எஸ்டேட் துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடு 2.73 சதவீதம் சரிவை கண்டது• மும்பை பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில், 2,728 நிறுவன பங்குகள் குறைந்தும்; 1,229 நிறுவன பங்குகள் உயர்ந்தும்; 110 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின.அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 7,171 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்று இருந்தனர்.கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.11 சதவீதம் குறைந்து, 76.05 அமெரிக்க டாலராக இருந்தது.ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா அதிகரித்து, 85.86 ரூபாயாக இருந்தது.டாப் 5 நிப்டி 50 பங்குகள்அதிக ஏற்றம் கண்டவை பஜாஜ் ஆட்டோ நெஸ்லே இந்தியா ஹிந்துஸ்தான் யுனிலீவர் மஹிந்திரா & மஹிந்திரா பிரிட்டானியாஅதிக இறக்கம் கண்டவை ஓ.என்.ஜி.சி., ஸ்ரீராம் பைனான்ஸ் பி.பி.சி.எல்., கோல் இந்தியா டாடா ஸ்டீல்
20-Dec-2024