மேலும் செய்திகள்
புதிய பங்கு வெளியீடு 4 நிறுவனங்களுக்கு அனுமதி
07-Nov-2024
பங்கு வெளியீடுகளில் புதிய சாதனை
11-Nov-2024
சென்னை:சென்னையை தலைமை யிடமாக கொண்ட தொழில்நுட்ப மனிதவள மேம்பாட்டு நிறுவனமான சி.ஐ.இ.எல்.எச்.ஆர்., சர்வீஸ், 355 கோடி ரூபாய் முதலீடு திரட்ட, பொது பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கேட்டு, 'செபி'யிடம் விண்ணப்பித்து உள்ளது. புதிய பங்குகள் வாயிலாக 335 கோடி ரூபாயும்; மீதி தொகை, முதலீட்டாளர்கள் வசமுள்ள கிட்டத்தட்ட 47.40 லட்சம் பங்குகள் விற்பனை வாயிலாகவும் திரட்டப்படும். முன்னாள் தமிழக அமைச்சர் பாண்டியராஜனை தலைவராக கொண்ட இந்நிறுவனம், திரட்டப்படும் தொகையை, துணை நிறுவனங்களில் முதலீடு செய்வதுடன், மூலதன தேவைகளுக்கும் பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. விற்பனைக்கு வரும் மொத்த பங்குகளில் 25.44 லட்சம் பங்குகள் பாண்டியராஜனிடமும்; 6.29 லட்சம் பங்குகள் ஹேமலதா ராஜனின் வசமும் உள்ளன. ஆட்சேர்ப்பு, பணியாளர்கள், ஊதிய செயலாக்கம், வணிகரீதியாக மனிதவள ஆலோசனை, திறன் மேம்பாடு ஆகிய சேவைகளை சி.ஐ.இ.எல்.எச்.ஆர்., சர்வீஸ் நிறுவனம் வழங்கி வருகிறது.
07-Nov-2024
11-Nov-2024