உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / மூன்றாவது நாளாக சரிவு

மூன்றாவது நாளாக சரிவு

மூன்றாவது நாளாக சரிவு

நிப்டி: 24,426.85 மாற்றம்: 74.05 இறக்கம் சிவப்பு சென்செக்ஸ்: 79,809.65 மாற்றம்: 270.92 இறக்கம் சிவப்பு சரிவுக்கு காரணங்கள் அமெரிக்க வரி விதிப்பால் எச்சரிக்கை உணர்வு தொடர்ந்து வெளியேறும் அன்னிய முதலீட்டாளர்கள் வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று, பங்குச் சந்தை குறியீடுகள் சரிவுடன் முடிவடைந்தன. இந்திய பொருட்கள் இறக்குமதி மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால், முதலீட்டாளர்கள் தொடர்ந்து எச்சரிக்கையை கடைப்பிடித்தனர். அன்னிய முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான பங்கு விற்பனையும் சரிவுக்கு வழி வகுத்தது. மும்பை பங்குச் சந்தையின் ஸ்மால் கேப் மற்றும் மிட்கேப் குறியீடுகள் முறையே 0.41 சதவீதமும்; 0.29 சதவீதமும் சரிவு கண்டன. கடந்த மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் சென்செக்ஸ் 1,826 புள்ளிகளும்; நிப்டி 541 புள்ளிகளும் இழந்துள்ளன. அதே நேரத்தில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பில் 11.21 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது மாதமாக பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்துள்ளன.

உலக சந்தைகள்

வியாழனன்று அமெரிக்க சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., ஹாங்காங்கின் ஹேங்சேங் உயர்வுடனும், ஜப்பானின் நிக்கி, தென் கொரியாவின் கோஸ்பி சரிவுடனும் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகின. உயர்வு கண்ட பங்குகள் நிப்டி (%) ஐ.டி.சி., 2.15 ஸ்ரீராம் பைனான்ஸ் 1.79 பெல் 1.53 சரிவு கண்ட பங்குகள் நிப்டி (%) மஹிந்திரா அண்டு மஹிந்திரா 2.89 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2.16 இன்போசிஸ் 2.07 அன்னிய முதலீடு அன்னிய முதலீட்டாளர்கள் ___ கோடி ரூபாய்க்கு பங்குகளை ___ இருந்தனர். கச்சா எண்ணெய் உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.80 சதவீதம் குறைந்து, 68.07 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 61 பைசா குறைந்து, இதுவரை இல்லாத அளவுக்கு 88.19 ரூபாயாக சரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை