நிப்டியில் உயர்வு கண்ட பாதுகாப்புத்துறை பங்குகள்
இஸ்ரேல் - ஈரானுக்கு இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், வெள்ளியன்று, பாதுகாப்புத்துறை நிறுவனங்களின் பங்கு குறியீடுகள் 2 சதவீதம் வரை உயர்ந்து காணப்பட்டன. 18 நிறுவனங்களில் 16 நிறுவனங்களின் பங்குகள் உயர்வு கண்டிருந்தன. குறிப்பாக, பி.இ.எம்.எல்., 9 சதவீத ஏற்றத்துடன் முன்னிலை வகித்தது. கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்டு இன்ஜினியரிங், கொச்சின் ஷிப்யார்டு ஆகியவற்றின் பங்குகள் 5 சதவீதம் வரை உயர்ந்திருந்தன. பாரத் எலக்ட்ரானிக்சின் பங்குகள் 2 சதவீதம் வரையும், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் ஒரு சதவீதமும் உயர்வைக் கண்டிருந்தன.