மேலும் செய்திகள்
வர்த்தக துளிகள்
13-Apr-2025
7.78 ஜிகா வாட்டாக அதிகரிப்புநடப்பாண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின் சூரிய மின்சக்தி திறன் சேர்க்கை 7.78 ஜிகா வாட்டுக்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது. இது, கடந்த மூன்றாண்டுகளில் இரண்டாவது அதிகபட்சம்.நடப்பாண்டின் முதல் காலாண்டில் சூரிய மின்சக்தி திறன் சேர்க்கை கடந்த ஆண்டில் இருந்த 8.50 ஜிகா வாட்டைக் காட்டிலும், 8 சதவீதம் குறைந்துள்ளது. கடந்தாண்டை காட்டிலும் குறைவாக இருந்தாலும், கடந்த 13 காலாண்டுகளில் அடைந்த இரண்டாவது மிக உயர்ந்த திறன் சேர்க்கை இது.புதுடில்லி, மே 6-
பரமேஸ்வரன்நியமனம்ஐ.எம்.எப்., செயல் இயக்குநர் பதவியில் இருந்து கே.வி.சுப்ரமணியன் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலக வங்கியின் தற்போதைய நிர்வாக இயக்குநராக உள்ள பரமேஸ்வரனை தற்காலிகமாக நியமிக்க பரிந்துரைப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.பன்னாட்டு நிதியத்தின் நிர்வாகக்குழு கூட்டம் வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது. மேலும், இதில் பாகிஸ்தானுக்கான கூடுதல் நிதி உதவியை அங்கீகரிப்பதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், மத்திய அரசின் இந்த நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது.
அதானி பிரதிநிதிகள் முயற்சிஇந்திய மின்சார வினியோக ஒப்பந்தங்களைப் பெற, அமெரிக்க அதிகாரிகளுக்கு, இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான கவுதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி லஞ்சம் கொடுத்ததாகவும், அமெரிக்க முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தியதாகவும் கடந்த நவம்பரில் குற்றம் சாட்டப்பட்டது.இதையடுத்து, அதானி மற்றும் அவரது நிறுவனத்தின் பிரதிநிதிகள், அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் அதிகாரிகளை சந்தித்து, அமெரிக்க லஞ்ச வழக்குகள் விசாரணையில், அதானிக்கு எதிரான குற்றவியல் குற்றச்சாட்டுகளை ரத்து செய்வதற்கான பேச்சில் ஈடுபட்டுள்ளதாக புளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகம், 3,300க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பெயர்களை அதிகாரப்பூர்வ பதிவுகளில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. நிறுவனங்களுக்கான சட்டப் பிரிவு 248 - 2ன் கீழ், பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் ஓராண்டுக்குள் வணிகத்தை துவங்க தவறியது அல்லது முந்தைய நிதியாண்டுகளில் உடனடியாக எந்த வணிகத்தையும் அல்லது செயல்பாடுகளையும் மேற்கொள்ளாதது ஆகிய காரணங்களால் இந்நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக 700 நிறுவனங்கள் அதிகாரப்பூர்வ பதிவுகளில் இருந்து தங்கள் நிறுவன பெயர்களை நீக்க கோரியுள்ளன.
13-Apr-2025