உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / முதல் புல்லட் ரயில் தயாரிப்பு ஆர்டர் பெற்றது பி.இ.எம்.எல்.,

முதல் புல்லட் ரயில் தயாரிப்பு ஆர்டர் பெற்றது பி.இ.எம்.எல்.,

பெங்களூரு:நாட்டின் முதல் புல்லட் ரயில் பெட்டிகள் தயாரிப்பிற்கான ஆர்டரை, ஐ.சி.எப்., நிறுவனத்திடம் இருந்து, 'பாரத் எர்த் மூவர்ஸ்' நிறுவனம் பெற்றுள்ளது.பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட பொதுத்துறை நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ், சென்னையை சேர்ந்த ஐ.சி.எப்., நிறுவனத்திடம் இருந்து, 867 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு புல்லட் ரயில்கள் தயாரிப்பதற்கான ஆர்டரை பெற்றுள்ளது.பெட்டி ஒன்றுக்கு 27.86 கோடி ரூபாய் வீதம், மொத்தம் 866.86 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு உள்ளது.முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில், உள்நாட்டிலேயே தயாராகும் இந்த ரயில், அதிகபட்சமாக 280 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.மேலும், எட்டு பெட்டிகள் கொண்ட ஒரு புல்லட் ரயிலில், 530 பேர் வரை பயணிக்க முடியும். தேவையை பொறுத்து, 12 முதல் 16 ரயில் பெட்டிகள் வரை இணைத்து கொள்ள முடியும். முதல் புல்லட் ரயில், வரும் 2026 டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்த புல்லட் ரயில்கள், 508 கி.மீ., தொலைவு கொண்ட மும்பை -- ஆமதாபாத் இடையேயான நாட்டின் முதல் புல்லட் ரயில் தடத்தில் இயக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை