உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / கார்பன் வரி விலக்கு பெறாததால் இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கும் ஜி.டி.ஆர்.ஐ., அமைப்பு அறிவிப்பு

கார்பன் வரி விலக்கு பெறாததால் இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கும் ஜி.டி.ஆர்.ஐ., அமைப்பு அறிவிப்பு

புதுடில்லி:'பிரிட்டன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில், கார்பன் வரியில் இருந்து விலக்கு பெற தவறியதால், இந்தியாவில் அவை சம்பந்தமான பொருட்கள் ஏற்றுமதியில் தாக்கத்தை ஏற்படுத்தும்' என, ஜி.டி.ஆர்.ஐ., எனும் உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்து உள்ளது. கடந்த 2023 டிசம்பரில், பிரிட்டன் அரசு சி.பி.ஏ.எம். எனப்படும் கார்பன் அளவை சரிசெய்தல் நடைமுறை, வரும் ஜனவரி 2027 முதல் அமலுக்கு வருமென அறிவித்தது. இதன்படி, கார்பன் உமிழ்வை குறைக்கும் முயற்சியாக, சில இறக்குமதி பொருட்களுக்கு கார்பன் வரி விதிக்கப்பட உள்ளது. இது குறித்து ஜி.டி.ஆர்.ஐ., அமைப்பின் நிறுவனர் அஜய் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளதாவது: நாம் பிரிட்டன் பொருட்களுக்கு வரியில்லா இறக்குமதிக்கு அனுமதித்த போதிலும், இந்தியாவின் ஸ்டீல் மற்றும் அலுமினியம் பொருட்களுக்கு, வரும் ஜனவரி 2027 முதல், பிரிட்டன் கார்பன் வரி விதிக்கும். இதனால் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கான ஏற்றுமதியில் 6,600 கோடி ரூபாய் பாதிப்பு ஏற்படும். இது சமச்சீரற்ற தன்மை. இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தின் போது, ஐரோப்பிய யூனியனும் இதே அணுகுமுறையை பின்பற்ற வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ