படுக்கையில் விழுந்த பங்குகள்; மருத்துவமனை பங்குகள் 7% வரை சரிவு
மருத்துவமனைகள் மருந்துகளுக்கு அதிக விலை வசூலிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதன் எதிரொலியாக, இத்துறை சார்ந்த பங்குகள் நேற்று 7 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன. சிறு விற்பனையாளர்களுக்கு 2,700 ரூபாய்க்கு வழங்கப்படும் புற்றுநோய் மருந்து, 27,000 ரூபாய்க்கு விற்கப்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், அனைத்து மருந்துகளுக்கும் 16 சதவீத லாப வரம்பு நிர்ணயிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது. இதையடுத்து, 'அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ், யதார்த் ஹாஸ்பிட்டல்ஸ்' உள்ளிட்ட நிறுவன பங்குகள் 7 சதவீதம் வரை வீழ்ச்சிகண்டன. 'நிப்டி ஹெல்த்கேர் ' குறியீடு 2.57 சதவீதமும், 'பி.எஸ்.இ., ஹெல்த்கேர்' குறியீடு 2.35 சதவீதமும் சரிந்தன.