உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / துபாய் நிறுவனத்துடன் எச்.எஸ்.எல்., புரிந்துணர்வு

துபாய் நிறுவனத்துடன் எச்.எஸ்.எல்., புரிந்துணர்வு

புதுடில்லி: பொதுத்துறையை சேர்ந்த கப்பல் கட்டும் நிறுவனமான ஹிந்துஸ்தான் ஷிப்யார்டு, துபாயைச் சேர்ந்த எம்.சி.ஐ.வேர்ல்டு எல்.எல்.சி., நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. மும்பையில் கடந்த அக்.27 முதல் 31ம் தேதி வரை நடைபெற்ற, இந்திய கடல்சார் வார நிகழ்வில், பிரதமர் மோடி முன்னிலையில் இரு நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவில் உள்ள கப்பல் பழுது நீக்கும் சந்தையில் ஹிந்துஸ்தான் ஷிப்யார்டு நிறுவனம் நுழைய உள்ளது. மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்க நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப ரீதியில் சேவையாற்ற முடியும் என்பதோடு, கப்பல் பழுது நீக்கும் சேவையைத் தன் விசாகப்பட்டினம் தளத்திலிருந்தே மேற்கொள்ள உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை