உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் /  ஏற்றுமதியை ஊக்குவிக்கும் இந்திய துாதரகங்கள்

 ஏற்றுமதியை ஊக்குவிக்கும் இந்திய துாதரகங்கள்

உலகளவில் பொருளாதார நிச்சயமற்றத்தன்மை நிலவும் சூழலில், நம் நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை, வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மேற்கொள்வதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: இந்திய வர்த்தக பிரதிநிதிகளுக்கான வழிகாட்டுதல்களில், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள், அந்தந்த நாடுகளில் இந்தியப் பொருட்களுக்கான வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும். இதில்,வரி அல்லாத பிற இறக்குமதி தடைகளை நிர்வகித்தல், சந்தை நடவடிக்கைகள், திட்டமிடல் மற்றும் வள மேலாண்மை, வர்த்தக தகவல் மற்றும் சந்தை ஆய்வு ஆகியவை அடங்கும். மேலும், நடைமுறையில் உள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை பயன்படுத்தி, வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை