உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ஐ.பி.ஓ., ( எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் )

ஐ.பி.ஓ., ( எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் )

எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் தென்கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் புதிய பங்கு வெளியீடு வாயிலாக 15,000 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட அக்டோபரில் வர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. கடந்தாண்டு டிசம்பரில் இந்நிறுவனம் ஐ.பி.ஓ.,வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், இந்தாண்டு மார்ச்சில் செபி ஒப்புதல் அளித்திருந்தது. அமெரிக்க வரி விதிப்பு காரணமாக சந்தை கடும் சரிவை கண்டதால், இந்நிறுவனம் தன் பங்கு வெளியீட்டை தள்ளி வைத்தது. கடந்தாண்டு அக்டோபரில் ஐ.பி.ஓ., வந்த ஹூண்டாய் நிறுவனத்துக்கு பிறகு, இரண்டாவது மிகப்பெரிய மதிப்பு கொண்ட ஐ.பி.ஓ., இதுவாகும். இந்த செய்தியை தனியாக வைக்கவும் வெல்த் கம்பெனி பண்டின் புதிய பிளெக்ஸி கேப் வெல்த் கம்பெனி மியூச்சுவல் பண்டு, முதல்முறையாக பிளெக்ஸி கேப் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் வாயிலாக திரட்டப்படும் தொகை லார்ஜ், மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளில், நிறுவனத்தின் அடிப்படை, மதிப்பு மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப முதலீடு செய்யப்பட உள்ளது. புதிய பண்டு திட்டத்துக்கு, செப்.24ல் துவங்கி அக்.8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ